கேரளாவில் 56 நாள்களுக்குப் பிறகு பேருந்து சேவை தொடக்கம்
கேரளாவில் 56 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் 56 நாள்களுக்குப் பிறகு இன்று பேருந்து சேவை தொடங்கியது. பேருந்து கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் மத்திய அரசு அறிவித்தக் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று கேரள மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஒரு சில நகரப் பகுதிகளில் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருந்தது.
பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிகள் அமர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story