“புலம் பெயர் தொழிலாளர்களின் ரத்தம் வியர்வையில் தான் நாடு இயங்கி வருகிறது” - பா.ஜ.க. மீது பிரியங்கா காந்தி சாடல்
புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு என்றும் அவர்களின் ரத்தம் வியர்வையில் தான் நாடு இயங்கி வருவதாகவும் பிரியங்கா காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
புலம் பெயர் தொழிலாளர்களின் ரத்தம் மற்றும் வியர்வையில் தான் நாடு இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர்களின் நலனை பேணுவதற்கு அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அரசியல் செய்வதற்கு உரிய நேரம் இதுவல்ல என்று பா.ஜ.க.வை அவர் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் வழங்கிய பேருந்துகளை பா.ஜ.க தான் ஏற்பாடு செய்தது என்று விளம்பரப்படுத்த விரும்பினாலும் செய்து கொள்ளுங்கள் என்றும் பிரியங்கா கூறியுள்ளார். மேலும் காலதாமதம் செய்யாமல் புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் அதனை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரியங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story