நாட்டின் மொத்த கொரோனா நோயாளிகளில் 6.39 சதவீதம் பேருக்குத்தான் ஆஸ்பத்திரி சிகிச்சை தேவை - மத்திய அரசு தகவல்
நாட்டின் மொத்த கொரோனா நோயாளிகளில் 6.39 சதவீதம் பேருக்குத்தான் ஆஸ்பத்திரி சிகிச்சை தேவை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது,
புதுடெல்லி,
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாட்டில் இப்போது சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 149 ஆகும். இவர்களில் 6.39 சதவீதம் பேருக்குத்தான் ஆஸ்பத்திரி சிகிச்சை தேவைப்படுகிறது.
2.94 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் உதவியும், 3 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சையும், 0.45 சதவீதம் பேருக்கு வெண்டிலேட்டர் உதவியும் அவசியமாக உள்ளது.
இதுவரை 42 ஆயிரத்து 298 பேர் குணமடைந்துள்ளனர். ஊரடங்கின் தொடக்கத்தில், குணமடைவோர் விகிதம் 7 சதவீதமாக இருந்தது. தற்போது, 39.62 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
4-ம் கட்ட ஊரடங்கில், குறைந்த அளவிலான செயல்பாடுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலாக்கத்தை மாநில அரசுகளுடன் இணைந்து உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story