உள்நாட்டு விமான போக்குவரத்தால் கொரோனா மேலும் அதிகரித்து விடக்கூடாது- மராட்டிய மந்திரி கவலை


உள்நாட்டு விமான போக்குவரத்தால் கொரோனா மேலும் அதிகரித்து விடக்கூடாது- மராட்டிய மந்திரி கவலை
x
தினத்தந்தி 21 May 2020 6:23 AM IST (Updated: 21 May 2020 6:23 AM IST)
t-max-icont-min-icon

உள்நாட்டு விமான போக்குவரத்தால் கொரோனா மேலும் அதிகரித்து விடக்கூடாது என்று மராட்டிய மந்திரி கவலை தெரிவித்துள்ளார்.

மும்பை,

வருகிற 25-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்தார். இதுகுறித்து மாநில நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு விமான பயணிகளுக்கு என்ன நிபந்தனைகள் விதித்து உள்ளார்கள் என்பது முக்கியம். 

உரிய பரிசோதனை, தனிமைப்படுத்த தயாராக இருந்து, பயணிகள் மருத்துவ சான்றிதழ் வைத்திருந்தால் நாம் மத்திய அரசின் முடிவை ஏற்று தான் ஆக வேண்டும். தேசிய அளவில் ஒரு முடிவு எடுக்கப்பட்ட பிறகு அதற்கு மாறாக நாம் முடிவு எடுப்பது சரியாக இருக்காது.

ஆனால் எங்களுடைய கவலை என்னவென்றால் விமான சேவை மீண்டும் தொடங்குவதால் மும்பை, புனேயில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட கூடாது. இதை தடுக்க அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story