கேரளாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கேரளா சுகாதாரத்துறை


கேரளாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கேரளா சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 21 May 2020 12:31 PM GMT (Updated: 21 May 2020 12:31 PM GMT)

கேரளாவில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரளா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,


சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  உகானில் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளும்  ஏற்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கேரளாவில் கொரோனா நோய்த் தொற்று படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், கேரளாவில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 24 பேரில், 14 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 10 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் கேரளா சுகாதாரத்துறை  கூறியுள்ளது.

இதன் மூலம் கேரளாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது.

Next Story