மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,642 ஆக உயர்வு


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,642 ஆக உயர்வு
x
தினத்தந்தி 21 May 2020 3:37 PM GMT (Updated: 21 May 2020 3:37 PM GMT)

நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1,454 ஆக உயர்வடைந்து உள்ளது.

புனே,

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.  எனினும், கடந்த 4ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  தொடர்ந்து 18ந்தேதி முதல் அமலான 4வது கட்ட ஊரடங்கில் அதிக அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

நாட்டிலேயே மராட்டியத்தில் அதிக அளவு கொரோனா பாதிப்பு உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 2,345 பேருக்கு புதிய பாதிப்புகள் உறுதியாகி உள்ளன.  இதுவரை 41 ஆயிரத்து 642 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  64 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,454 ஆக உயர்ந்து உள்ளது.  மும்பையில் அதிகளவாக 41 பேர் பலியாகி உள்ளனர்.  11 ஆயிரத்து 726 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், வீடு திரும்பி உள்ளனர்.

Next Story