எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்.தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை


எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்.தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 22 May 2020 9:51 AM IST (Updated: 22 May 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

லம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்  சொந்த ஊர் திரும்பும் விவகாரம், ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

இன்று மாலை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான  ஹேமந்த் சோரன் பங்கேற்கின்றனர். 

இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின்,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆலோசனையில் பங்கேற்க போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் பங்கேற்பு குறித்து இன்னும் உறுதிபடுத்தவில்லை என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story