ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக குறைப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர்


ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக குறைப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர்
x
தினத்தந்தி 22 May 2020 10:16 AM IST (Updated: 22 May 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

புதுடெல்லி,

ரிசர் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
  1. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 
  2. ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் குறைக்கப்படுகிறது. இதன்படி, 4.4 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக ரெப்போ வட்டி விகிதம் குறைகிறது.
  3. ரிசர்வ் வங்கியின் பணிகள் தொய்வடையாமல் இருக்க 200 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். 
  4. குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும்.
  5. 11 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உலக பொருளாதாரம் சரிவு கண்டுள்ளது. 
  6. உலக பொருளாதாரம் 13 சதவிகிதம் முதல் 32 சதவிகிதம் வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும்.
  7. நகர்புற கிராமப்புற தேவைகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன.
  8. வேளாண் துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. 
  9. கொரோனா தாக்கத்தால் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் கடும் தாக்கத்தை சந்தித்துள்ளன.
  10.  மத்திய அரசின் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 


Next Story