உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் பொறுப்பேற்பு
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதுடெல்லி,
ஐ..நா.வின் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், மே 22-ம் தேதி பதவியேற்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார். இந்த குழு ஆண்டுக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் செயல்திட்டங்களுக்கு இந்த குழு பரிந்துரை வழங்கும். ஹர்ஷவர்தன் 3 ஆண்டு காலம் இந்த பதவியில் நீடிப்பார்.
Related Tags :
Next Story