கேரளாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பினராயி விஜயன் தகவல்
கேரளாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மராட்டிய மாநிலம் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அங்கு நோய்த் தொற்று படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கேரளாவில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், “கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேரில், 17 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 21 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள்” என்றும் அவர் கூறினார்.
இதன் மூலம் கேரளாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 732 ஆகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 216 ஆகவும் உள்ளது.
Related Tags :
Next Story