தொழிலாளர்கள் வாரத்தில் 60 மணி நேரம் பணியாற்ற வேண்டும் கர்நாடக அரசு உத்தரவு


தொழிலாளர்கள் வாரத்தில் 60 மணி நேரம் பணியாற்ற வேண்டும் கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 23 May 2020 2:14 AM IST (Updated: 23 May 2020 2:14 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்கள் வாரத்தில் 60 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாநிலத்தில் 50 நாட்களுக்கும் மேல் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த நிறுவனங்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்தி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது வாரத்தில் ஒரு தொழிலாளி 60 மணி நேரம் பணியாற்ற வேண்டும். கூடுதல் நேரம் பணியாற்றினால் வழங்கப்படும் சம்பளம் தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு வருகிற ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் சிவலிங்கையா பிறப்பத்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story