டெல்லியில் உள்ள ரெயில் பவனில் மூத்த பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று
டெல்லியில் உள்ள ரெயில் பவனில் மூத்த பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய ரெயில்வேயின் தலைமை அலுவலகமான ரெயில் பவன் டெல்லியில் உள்ளது. இங்கு பணிபுரியும் ரெயில்வே பாதுகாப்பு படை மூத்த பெண் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் ரெயில்வே உயர் அதிகாரிகள் குடியிருக்கும் அங்குள்ள காமன்வெல்த் விளையாட்டு குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருக்கு லேசான காய்ச்சல் மட்டுமே இருப்பதால், வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரெயில் பவனில் ஏற்பட்ட 3-வது பாதிப்பு இதுவாகும். முதன் முதலில் அங்கு 4-வது மாடியில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கடந்த 14 மற்றும் 15-ந் தேதிகளில் ரெயில் பவன் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story