உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்


உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 23 May 2020 10:39 AM GMT (Updated: 23 May 2020 10:39 AM GMT)

உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில். பரிதவிக்கும் தொழிலாளர்கள்.

புவனேஸ்வரம்

மார்ச் மாத இறுதியில் மத்திய அரசு திடீரென நாடு தழுவிய ஊர்டங்கை  அறிவித்தபோது - நாடு முழுவதும் தொழிற்சாலைகள், கட்டுமான தளங்கள் மற்றும் செங்கல் சூளைகளில் பணிபுரியும் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு, தங்குமிடம் அல்லது வருமானம் இல்லாமல் தவித்தனர்.

ஊரடங்கால் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் கிராமத்திற்கு கால்நடையாக சென்றனர். பல நூறு கிலோமீட்டர்க நடந்து சென்றனர்.சோர்வு அல்லது விபத்துக்களில், உடல்நிலை சரியில்லாமல் அல்லது வீட்டிற்கு செல்லும் வழியில் நுற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்து உள்ளனர்.

தற்போது மத்திய அரசு இதற்காக சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. மாநில அரசும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மாநிலங்களுக்கிடையே புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக வேலையிழந்துள்ள நிலையில், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மராட்டிய மாநிலம் வசாய் ரெயில் நிலையத்தில் இருந்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் செல்ல வேண்டிய ரெயில் புறப்பட்டது. முற்றிலும் வேறு திசையில் பயணித்த ரெயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு வந்து சேர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் செல்ல வேண்டிய தொழிலாளர்கள், ஒடிசாவுக்கு வந்த நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் இது தொடர்பாக ரெயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். எனினும், அந்த ரெயில் ரூர்கேலா செல்ல வேண்டியதுதான் என்று அதிகாரிகள் குழப்பமான பதிலை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரெயில்வே, சிறப்பு ரெயில்கள் வழக்கமான வழித்தடங்களில் இல்லாமல், சில வழித்தடங்கள் மாற்றி இயக்கப்படுகின்றன. ரெயில் ஓட்டுநர் குழப்பமடைந்து ரூர்கேலா வழியாக ரெயிலை இயக்கியிருக்கலாம் என்று கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளது. எனினும், இது தொடர்பாக ரெயில் இருந்த தொழிலாளர்களிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ரெயில்வே துறையின் குழப்பத்தால் தற்போது உத்தரப்பிரதேசம் செல்ல வேண்டிய தொழிலாளர்கள், ஒடிசாவில் பரிதவித்து நிற்கின்றனர்.

Next Story