தேசிய செய்திகள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு + "||" + Govt to accept travel expenses for migrant workers - First-Minister Yeddyurappa

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு, 

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார்கள். அவர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பயண கட்டணத்தில் மத்திய அரசு 85 சதவீதத்தை ஏற்றுக்கொள்கிறது. 

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடகத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற காரணங்களுக்காக வந்துள்ளவர்கள் சிரமிக் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்கான செலவை மாநில அரசே ஏற்கும்“ என்றார்.

முதல்-மந்திரி எடியூரப்பாவின் இந்த முடிவை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வரவேற்றுள்ளார். காங்கிரஸ் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக முதல்-மந்திரிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம்என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
2. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம்: நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு ஏற்பாடு
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம் செய்வதற்கு, நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
3. புலம் பெயர்ந்த 827 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு மாவட்ட நிர்வாகம் தகவல்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 827 பேர் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அவர்களது சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
4. சேலத்தில் இருந்து ரெயில் மூலம் 347 தொழிலாளர்கள் ராஜஸ்தான் புறப்பட்டனர்
சேலத்தில் இருந்து ரெயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 347 பேர் அவர்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் ராமன் வழியனுப்பி வைத்தார்.
5. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஊரடங்கில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.