தேசிய செய்திகள்

மணமகனை மணமுடிக்க 80.கி.மீ தூரம் தனியாக நடந்து சென்று கரம் பிடித்த மணப்பெண்! + "||" + UP girl walks 80 km to reach stranded groom's house, ties nuptial knot

மணமகனை மணமுடிக்க 80.கி.மீ தூரம் தனியாக நடந்து சென்று கரம் பிடித்த மணப்பெண்!

மணமகனை மணமுடிக்க 80.கி.மீ தூரம் தனியாக நடந்து சென்று கரம் பிடித்த மணப்பெண்!
உத்தரபிரதேசத்தில் மணமகனை கரம்பிடிக்க 80.கி.மீ தூரம் தனியாக நடந்து சென்று கைபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பெண் கோல்தி (வயது 20,) இவருக்கும் அதே மாநிலம் கன்னோஜை சேர்ந்த வீரேந்திர குமாருக்கும் (வயது 24) கடந்த மே 4ம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து வசதி இல்லை. அதனால் இருவரின் திருமணமும் தள்ளிப்போனது. இதனிடையே மணப்பெண்ணும், மணமகனும் போன் மூலமாகவே பேசி வந்துள்ளனர்.


ஊரடங்கு தொடர்ந்ததால் திருமணம் தொடர்ந்து தள்ளிப்போகவே ஒரு கட்டத்தில் மணப்பெண் கோல்தி, கான்பூரிலிருந்து 80 கி.மீ., தொலைவில் கன்னோஜில் உள்ள மணமகன் வீரேந்திரகுமார் வீட்டிற்கு தனியாக நடந்து வந்து விட்டார். திடீரென்று மணப்பெண் வந்து சேர்ந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் திருமணத்தை அருகிலுள்ள கோவிலில் எளிமையாக நடத்தி முடித்தனர்.

திருமணத்திற்கு ஒரு சில உறவினர்களே வந்திருந்தனர். மணமக்கள் உட்பட அனைவரும் முக கவசம் அணிந்து சமூக விலகலை கடைப்பிடித்தனர். மணப்பெண் துணிச்சலுடன் தனியாக 80 கி.மீ., நடந்து சென்று மணமகனை கைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.