ஒடிசாவில் சிறப்பு ரெயிலில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி
தெலுங்கானாவில் இருந்து சிறப்பு ரெயிலில் ஒடிசாவுக்கு ஊர் திரும்பிய புலம்பெயர் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
புவனேஸ்வர்,
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால், பேருந்து, ரெயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சரக்கு ரெயில்கள் செல்ல அனுமதி உள்ளது. இது தவிர்த்து புலம்பெயர் தொழிலாளர்களின் நன்மைக்காக ஷ்ராமிக் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரெயில்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்களுடைய ஊருக்கு போய் சேர்ந்த திருப்தியில் உள்ளனர்.
இதேபோன்று, தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரில் இருந்து ஷ்ரமிக் சிறப்பு ரெயில் ஒன்று புறப்பட்டது. இதில் இளம் கர்ப்பிணி ஒருவர் பயணித்துள்ளார். அவர் ஒடிசாவின் பாலங்கீர் நகருக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.
அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனால், பாலங்கீர் நகரை அடைந்ததும், அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. தாய் மற்றும் சேய் என அவர்கள் இருவரும் நலமுடன் உள்ளனர்.
Related Tags :
Next Story