உத்தரப்பிரதேசம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர ஆணையம் - யோகி ஆதித்யநாத் உத்தரவு


உத்தரப்பிரதேசம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர ஆணையம் - யோகி ஆதித்யநாத் உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2020 11:22 PM IST (Updated: 24 May 2020 11:22 PM IST)
t-max-icont-min-icon

உத்தரப்பிரதேசம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு வேலை தர ஆணையம் அமைக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

லக்னோ,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தநிலையில் நாடு தழுவிய பொது முடக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

பொது முடக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சாலை வழியாக நடந்தே சொந்த மாநிலம் திரும்ப முடிவு செய்தனர். இதில் பலர் பசி, விபத்தால் உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.

இந்த ஊரடங்கில் பொதுமக்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும், சொந்த ஊர் திரும்ப முடியாமலும் வேலை எதும் இல்லாமலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில்

உத்தரப்பிரதேசம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு வேலை தர ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக ஆணையம் அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story