கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா
கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் கேரளாவில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
25 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். கேரளாவில் கொரோனாவுக்கு தற்போது 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கண்ட தகவலை கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story