கேரளாவில் கைதிகளுக்கு கொரோனா 3 நீதிபதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்


கேரளாவில் கைதிகளுக்கு கொரோனா 3 நீதிபதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 26 May 2020 2:30 AM IST (Updated: 26 May 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், 3 நீதிபதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் 2 மாவட்டங்களில், குற்ற வழக்குகளில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட 3 விசாரணை கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவர்களை நீதிமன்றக்காவலில் வைத்த பய்யனூர், நெடுமங்காடு நீதிபதிகள் 3 பேர் மற்றும் தொடர்புடைய போலீசார் உள்பட சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இது மட்டுமின்றி, 3 விசாரணை கைதிகளுடனான விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகளில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் வாமனாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. டி.கே. முரளி (இந்திய கம்யூ.) கலந்துகொண்டதால், அவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கேரளாவில் நேற்று மட்டும் புதிதாக 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இங்கு அதிக தொற்றுள்ளவர்களை கொண்ட ‘ஹாட்ஸ்பாட்’டுகளாக 59 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Next Story