தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் பாராட்டு + "||" + RSS Praises PM Modi For Timely Intervention In Containing COVID-19

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் பாராட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் பாராட்டு
கொரோனா தடுப்பு விஷயத்தில் பிரதமர் மோடி சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததாக அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாராட்டியுள்ளது.
புதுடெல்லி,

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-மார்ச் மாத துவக்கத்தில்  மத்திய அரசு விமான நிலையங்களில்  தெர்மல் ஸ்கிரீன் மூலம் பரிசோதனைகளை நடத்தியது. அப்போதே, கொரோனா வைரஸை எதிர்கொள்வது தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்படத் தொடங்கின. 

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சரியான நேரத்தில்,  சரியான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக தொடர்பை பிரதமர் மோடி ஏற்படுத்தினார். கடந்தசில  ஆண்டுகளாகவே அவர் இதனை கடைபிடித்து வருகிறார்.  

கூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார். கொரோனா பாதிப்பின்போது, பல்வேறு மாநில முதல்வர்களை தொடர்பு கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தினார். இத்தாலி,  அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உயிரிழப்பு மிகக்குறைவாக உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ”இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” : அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்
இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. லடாக் பயணத்தின் போது சிந்து நதியில் பூஜை செய்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி நேற்று லடாக் பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் போது சிந்து நதியில் சிந்து தர்ஷன் பூஜைகளை செய்துள்ளார்.
4. பெங்களூருவில் 2 மணி நேரமாக தெருவோரம் வைக்கப்பட்டிருந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
கொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, உடலை தெருவோரம் வைத்தபடி 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலன்ஸூக்கு காத்திருந்துள்ளனர்.
5. "பிரதமரின் பயணம் வீரர்களுக்கு உத்வேகத்தை தரும்" - காங்கிரஸ் கட்சி
பிரதமர் மோடியின் லே பயணம் ராணுவ வீரர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கும் என்றும் அவர்களை ஒருங்கிணைக்க உதவும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.