தேசிய செய்திகள்

போருக்கு தயாராகும் சீனா!!! விளக்கும் செயற்கைகோள் புகைப்படங்கள் + "||" + NDTV Exclusive: China Expands Airbase Near Ladakh, Fighter Jets On Tarmac

போருக்கு தயாராகும் சீனா!!! விளக்கும் செயற்கைகோள் புகைப்படங்கள்

போருக்கு தயாராகும் சீனா!!! விளக்கும் செயற்கைகோள் புகைப்படங்கள்
சீனா போருக்கு தயாராகும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி

கொரோனா நெருக்கடியில் உலகம் சிக்கி தவிக்கும் போது சீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  செயற்கைகோளில் இருந்து எடுக்கப்பட்ட மூன்று புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீனாவின் போன்காங்காக் ஏரியில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சீனாவின் இராணுவ விமான தளம் விரிவு படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.முன்னதாக கடந்த மே 5, மற்றும் மே 6 தேதிகளில் இந்தியா சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.அந்த புகைப்படங்கள் முதலில் ஏப்ரல் 6 2020ல் திபெத்தில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தை காட்டுகிறது. இரண்டாவது மே 21ல் ஏதோ விரிவுபடுத்தும் கட்டுமான பணிகள் நடப்பதை காணமுடிகிறது.


மூன்றாவது படத்தில், இராணுவ விமானங்கள் மற்றும், ஆயுதங்கள் ஏற்றும் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
இந்திய வீரர்கள் 20 பேரை படுகொலை செய்த சம்பவத்தில் சீனா தனது நிலைப்பாட்டை நியாப்படுத்த இந்திய அரசு அனுமதித்தது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
2. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்
மோடி அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பொருளதாரா மந்த நிலை யை மறைக்கும் வகையில் மோடி இந்த லடாக் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என சீன ஊடகம் கூறி உள்ளது.
3. சீனாவின் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் எதிரொலி; ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதார தடை
ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்ட விவகாரத்தில், அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. இது தொடர்பான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
4. சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை
இந்திய ஊடகம் மற்றும் வலைத்தளங்களை சீனா தடை செய்து உள்ளது இதற்கு இந்திய செய்திதாள் சங்கம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.
5. சீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்
சீனா உடனான எல்லைத்தகராறு தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய ராணுவம் கூடுதல் வலுப்பெறும் என கருதப்படுகிறது.