வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு


வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 28 May 2020 5:52 AM GMT (Updated: 28 May 2020 8:25 AM GMT)

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடித்து உள்ளது.

புதுடெல்லி

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலிங்கம் ஒன்றை கண்டுபிடித்தது.

வியட்நாமின் சாம் கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் ஆட்சியாளரான இரண்டாம் இந்திரவர்மன் மன்னனின் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் தோண்டப்பட்டது. அங்கு சிவலிங்கம் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டது. இது குறுத்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் "இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணம்,  இந்தியாவையும் வியட்நாமின் நாகரீக இணைப்பையும் அவர் பாராட்டினார்.

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிக்கையின்படி, ஆய்வு மையத்தின் நான்கு பேர் கொண்ட குழு, வளாகத்தில் இரண்டு தனித்தனி குழுக்களாக கோயில்களை மீட்டெடுத்துள்ளது, இப்போது மூன்றாவது குழு கோவில்களில் வேலை செய்து வருகிறது. 


Next Story