தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று - பினராயி விஜயன் + "||" + 84 new COVID19 positive cases have been reported in Kerala today: Chief Minister Pinarayi Vijayan

கேரளாவில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று - பினராயி விஜயன்

கேரளாவில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று - பினராயி விஜயன்
கேரளத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.58 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 194 பேர் உயிரிழந்துள்ளனர்.


கேரளத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மேலும், தவறுதலாக புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தெலுங்கானாவுக்கு பதிலாக கேரளம் வரும் ரெயிலில் வந்த நிலையில், அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து வந்த 48 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 31 பயணிகளுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கேரளத்தில் 526 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. திருவனந்தபுரத்தில் 2 இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது: பினராயி விஜயன்
திருவனந்தபுரத்தில் 2 இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்- சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம்
கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
3. தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது - பினராயி விஜயன்
தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
4. தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது - பினராயி விஜயன்
தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது என்று பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
5. திருவனந்தபுரத்தில் மும்மடங்கு ஊரடங்கு - பினராயி விஜயன்
திருவனந்தபுரம் நகரப் பகுதியில் மும்மடங்கு ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.