தேசிய செய்திகள்

தனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ.20 லட்சத்திற்கு விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர்! + "||" + Madhya Pradesh man hires a 180-seater plane to ferry four family members

தனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ.20 லட்சத்திற்கு விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர்!

தனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ.20 லட்சத்திற்கு விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர்!
180 இருக்கைகள் கொண்ட விமானத்தை தனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ.20 லட்சத்திற்கு தொழில் அதிபர் வாடகைக்கு எடுத்துள்ளார்.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் ஊர்டங்கு  காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உள்நாட்டு வணிக விமான சேவைகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டன.

மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த  மதுபான தொழிற்சாலை அதிபரின் குடும்பம் போபாலில் சிக்கிகொண்டது.   கடந்த இரண்டு மாதங்களாக போபாலில் சிக்கிக்கொண்டிருந்த தனது மகள் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும்  பணிப்பெண் ஆகிய 4 பேரை டெல்லி அழைத்து வர ஏர்பஸ்-ஏ 320 விமானத்தை வாடகைக்கு எடுத்தார். 180 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தின் வாடகை  சுமார் ரூ .20 லட்சம் என்று விமான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானம் டெல்லியில் இருந்து போபால்  சென்று, பின்னர் அங்கிருந்து மீண்டும் டெல்லிக்கு திரும்பி வந்துள்ளது.

விமானம் திங்கள்கிழமை டெல்லியில் இருந்து போபாலுக்கு நான்கு பயணிகள் மற்றும் விமான குழுவினருடன்   சென்றது.மற்றவிவரங்களை விமான நிலைய அதிகாரிகள் வெளியிட வில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதி-கருத்துக்கணிப்பில் அம்பலம்
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதியுறுவது ஒரு கருத்துக்கணிப்பில் அம்பலமாகி உள்ளது.
2. கொரோனா ஊரடங்கின் 100-வது நாளை துக்க நாளாக அனுசரித்த பொதுமக்கள்; இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எதிர்பார்ப்பு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 100-வது நாளை பொதுமக்கள் துக்க நாளாக அனுசரித்தனர். இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
3. விமான சேவை நிறுத்தப்பட்டதால் சிகிச்சைக்காக கோவை வந்த இலங்கை பெண்கள் தவிப்பு நாடு திரும்ப உதவி செய்ய கோரிக்கை
விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதால் சிகிச்சைக்காக கோவை வந்த இலங்கை பெண்கள் தவித்து வருகிறார்கள். இதனால் தங்களுக்கு உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்து உள்ளனர்.
4. கொரோனா ஊரடங்கு காலத்திலும் மத்திய அரசின் திட்டத்தில் வீடு கட்டும் பணி தீவிரம்
கொரோனா ஊரடங்கு காலத்திலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டத்தில் வீடு கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
5. கொரோனா ஊரடங்கு: வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் 255 பேர் சென்னை வந்தனர்
வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் 255 பேர் சென்னை வந்துள்ளனர்.