தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் + "||" + Corona Vaccine in India In the diagnostic process 30 groups

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உள்பட 30 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட நிபுணர்கள்வரை அடங்கும். 20 குழுக்கள் முழு வேகத்தில் உள்ளன.


பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த தடுப்பூசியை ஓராண்டுக்குள் உருவாக்குவதுதான் உலக நாடுகளின் நோக்கம். தடுப்பூசி கண்டறிவது, மிகவும் சவாலான வேலை. பல முயற்சிகள் தோல்வி அடையலாம். எனவே, பெரிதும் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவில் 7½ லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7½ லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், அதில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4½ லட்சத்தை தாண்டி இருக்கிறது.
3. கொரோனா தடுப்பூசி பணி ஐதராபாத் நிஜாம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது
கொரோனா தடுப்பூசி பணி நேற்று ஐதராபாத் நிஜாம்அரசு மருத்துவமனையில் தொடங்கியது. முதல்கட்ட டோச் வழங்கப்பட்டது.
4. கொரோனா சிகிச்சை அளிக்கும் கவச உடையில் பெண் டாக்டர் ஒருவர் நடனமாடும் வீடியோ
கொரோனா சிகிச்சை அளிக்கும் கவச உடையில் பெண் டாக்டர் ஒருவர் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
5. இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக் செயலியின் பயன்பாடுக்கு தடை
ஹாங்காங்கில் டிக்டாக் செயலியின் பயன்பாடு மற்றும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.