தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + 2 terrorists shot dead in Kashmir

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர், 

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வான்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராஷ்டிரிய ஆயுதப்படை போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் மாநில போலீசார் அடங்கிய சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் நேற்று அதிகாலையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்படுவதை தடுப்பதற்காக கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்: தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம் செய்து தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.
2. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிப்பு
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிக்கப்பட்டது.
3. காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
4. டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
டெல்லியில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.