தேசிய செய்திகள்

ஐகோர்ட்டு பற்றிய கருத்து: மத்தியஅரசு வக்கீலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் + "||" + Comment on Highcourt: Congress condemns central government lawyer

ஐகோர்ட்டு பற்றிய கருத்து: மத்தியஅரசு வக்கீலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

ஐகோர்ட்டு பற்றிய கருத்து: மத்தியஅரசு வக்கீலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
ஐகோர்ட்டு பற்றிய மத்திய அரசு வக்கீலின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் என்ற தலைப்பில் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கின்போது, மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர், “ஐகோர்ட்டுகள் இணையான அரசுகளை நடத்தி வருகின்றன” என்று கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும். மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு முரட்டுத்தனமான போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த அரசு கோர்ட்டுகளை அடிபணிய வைப்பதற்கு முயற்சிக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏற்கனவே அரசுக்கு சங்கடம் ஏற்படுத்தும் தீர்ப்புகளை வழங்கியதால் சில நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசு மக்களுக்கு எதிராக கடைப்பிடித்து வரும் சமூக விலகல் அதிகரித்து வருகிறது. களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் ஏழை மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சமாளிக்க வழி தெரியாமல் செயல்படுகிறது மத்திய அரசு. ஆனால் இப்போது ஜனநாயகத்தை காப்பாற்றுவது பற்றி பிரதமர் பேசி வருகிறார்.

மார்ச் 24-ந் தேதிக்கு முன்பு இந்த அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்துக்கொண்டு இருந்தது. அதாவது இந்த அரசாங்கத்தின் செயல்திட்டம் 370-வது பிரிவு, சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் என்றுதான் இருந்ததே ஒழிய, கல்வி, பொது சுகாதாரம், மற்றும் ஏழைகள் மீதான அக்கறை என்று இருக்கவில்லை.

கொரோனா நோய்த்தொற்று மத்திய அரசின் செயலற்ற தன்மையை பகிரங்கப்படுத்தி உள்ளது. இப்போதாவது சக இந்தியர்கள் பற்றிய உங்கள் விளக்கம் என்ன? என்பதை பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன். இந்த நாட்டை நீங்கள் கையாண்டு வந்த வழிமுறையில் இருந்து இப்போதாவது மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறவிரும்புகிறேன் என்று கபில்சிபல் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வியாபாரி-மகன் உயிரிழந்த விவகாரம்: சாத்தான்குளத்தில் தங்கி சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட்டு விசாரிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த விவகாரத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு சாத்தான்குளத்தில் தங்கி இருந்து சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
2. ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு
ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. ஒப்பந்தப்பணியில் முறைகேடு புகார் தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்க போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
இன்டர்நெட் இணைப்பு வழங்குவதற்காக வழித்தடம் அமைக்கும் ஒப்பந்தப்பணி ஒதுக்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் புகார் குறித்து தி.மு.க. தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா பதிலடி
ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
5. ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் - அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.