இந்தியாவில் 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 8392 பேர் கொரோனாவால் பாதிப்பு


இந்தியாவில் 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 8392 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 9:42 AM IST (Updated: 1 Jun 2020 9:42 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை ஒரு நாள் பாதிப்பில் மிக அதிக அளவாக 8392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


புதுடெல்லி

மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 90 ஆயிரத்து 535 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8392 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டு உள்ளனர். இது மிக அதிக பட்ச ஒரு நாள் பாதிப்பாகும்.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5394 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவில் இருந்து 91,819 பேர் குணமடைந்துள்ளனர்
என கூறி உள்ளது.

Next Story