கொரோனா வீரர்களுக்கு எதிரான தாக்குதலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் - பிரதமர் மோடி
கொரோனா வீரர்களுக்கு எதிரான தாக்குதலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
புதுடெல்லி
பெங்களூரு ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலை. வெள்ளி விழா நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி; முன்கள பணியாளர்களின் சேவை அளப்பரியது.இந்திய மருத்துவ பணியாளர்களை உலகம் நன்றி உணர்வோடு நோக்கி வருகிறது
கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களே முன்னணி போர் வீரர்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் வீரர்களுக்கான உடைகள் அணியாத போர் வீரர்களாக உள்ள நமது மருத்துவ பணியாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது.கொரோனா வீரர்களுக்கு எதிரான தாக்குதலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்
தேசிய அளவில் ஊட்டச்சத்து திட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆயுஷ்மான் பாரத் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் ஆகும்.
புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்குவதன் மூலம் சுகாதாரத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுகிறது என கூறினார்.
Related Tags :
Next Story