தேசிய செய்திகள்

அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை + "||" + As US-China tensions escalate, Beijing advises India not to side with US

அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை

அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை
பனிப்போரில் அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
புதுடெல்லி

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அதிகரித்து வரும் அமெரிக்க-சீனா பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா-சீனா மோதலில் இந்தியா ஈடுபட வேண்டாம் என்று சீனா இந்தியாவுக்கு அறிவுறுத்தியுள்ளது

புதிய பனிப்போரில் சீனாவைத் தாக்கும் ஒரு அமெரிக்க சிப்பாயாக இந்தியா மாறக்கூடாது, இல்லையெனில் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் என்று சீனா கூறியுள்ளது.

இது குறித்து சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் கூறி இருப்பதவது:-

இந்தியாவில் தேசியவாத உணர்வு அதிகரித்து வருவதால், புதிய பனிப்போரில் சேரவும், அதிக லாபங்களுக்காக அதன் நிலையை சுரண்டவும் இந்திய அரசாங்கத்திற்கு ஆதரவாக சில குரல்கள் எழுந்துள்ளன.

இத்தகைய பகுத்தறிவற்ற குரல்கள் தவறாக வழிநடத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை,குரல்கள்  இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கட்டுப்படுத்தக்கூடாது.

அடிப்படையில், அமெரிக்க-சீனா மோதலில் ஈடுபடுவதால் இந்தியாவுக்கு அதிக லாபம் இல்லை, ஆதாயத்தை விட இழப்பு அதிகம், அதனால்தான் மோடி அரசு புதிய புவிசார் அரசியல் வளர்ச்சியை புறநிலை ரீதியாகவும் பகுத்தறிவுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில், சீனாவுடனான தனது உறவுகளில் எந்தவொரு பிரச்சினையையும் கையாள்வதில் அமெரிக்காவை இந்தியா சேர்க்கக்கூடாது, இல்லையெனில் அது சீனாவுக்கும்- இந்தியாவுக்கும் இடையிலான உறவை சிக்கலாக்கும் என கூறி உள்ளது.

சமீபத்திய சீனா-இந்தியா எல்லைப் பதட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க மத்தியஸ்தம் வழங்குவது தேவையற்றது என்றும், இந்தியாவும் சீனாவும் தங்கள் பிரச்சினைகளை அமைதியாக தீர்க்கும் திறன் கொண்டவை என்றும் அந்த கட்டுரை கூறியுள்ளது. இந்த விஷயத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை என்று கட்டுரை வலியுறுத்துகிறது.

"ஒரு புதிய பனிப்போரில், இந்தியா அமெரிக்காவை நோக்கி சாய்ந்தால் அல்லது சீனாவைத் தாக்கும் ஒரு அமெரிக்க சிப்பாயாக மாறினால், இரு ஆசிய அண்டை நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் பேரழிவு தரும் அடியை சந்திக்கும். மேலும் இந்திய பொருளாதாரம் அத்தகைய இழப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிக அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை
லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது... என வெள்ளை மாளிகை எச்சரித்து உள்ளது.
2. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.09 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.09 கோடியாக உயர்ந்துள்ளது.
4. சீனாவின் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் எதிரொலி; ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதார தடை
ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்ட விவகாரத்தில், அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. இது தொடர்பான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
5. சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை
இந்திய ஊடகம் மற்றும் வலைத்தளங்களை சீனா தடை செய்து உள்ளது இதற்கு இந்திய செய்திதாள் சங்கம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.