18 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் - தேர்தல் ஆணையம்


18 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் - தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 1 Jun 2020 6:50 PM IST (Updated: 1 Jun 2020 7:34 PM IST)
t-max-icont-min-icon

18 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

18 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3, மணிப்பூரில் 1, மேகாலயா 1,  ராஜஸ்தான் 3  இடங்களுக்கும் ஜூன் 19ம் தேதியில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைக்கான தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  நடைபெறும் என்றும் அதேபோல் ஜூன்.19 ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story