மத்திய போலீஸ் படை கேன்டீன்களில் விற்கக்கூடாத பொருட்கள் பட்டியலில் குளறுபடி


மத்திய போலீஸ் படை கேன்டீன்களில் விற்கக்கூடாத பொருட்கள் பட்டியலில் குளறுபடி
x
தினத்தந்தி 2 Jun 2020 3:59 AM IST (Updated: 2 Jun 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

மத்திய போலீஸ் படை கேன்டீன்களில் விற்கக்கூடாத பொருட்கள் பட்டியலில் குளறுபடி கண்டறியப்பட்டதால், புதிய பட்டியல் விரைவில் வெளியாகிறது.

புதுடெல்லி, 

உள்நாட்டு தயாரிப்புகளையே பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கேற்ப நாடு முழுவதும் மத்திய போலீஸ் படையின் 1,700 கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே ஜூன் 1-ந் தேதி முதல் விற்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த கேன்டீன்களில் விற்க தடை விதிக்கப்பட்ட 1,026 பொருட்களின் பட்டியலை நேற்று காலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. ஆனால், அதில் உள்நாட்டு தயாரிப்புகளும் இடம்பெற்று இருப்பது தெரிய வந்தது.

இந்த குளறுபடி கண்டறியப்பட்டதால், இப்பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, வேறு புதிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story