‘சானிடைசர்’ திரவ ஏற்றுமதி கட்டுப்பாடு தளர்வு: மத்திய அரசு அறிவிப்பு


‘சானிடைசர்’ திரவ ஏற்றுமதி கட்டுப்பாடு தளர்வு: மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2020 12:00 AM GMT (Updated: 2 Jun 2020 12:00 AM GMT)

‘சானிடைசர்’ திரவ ஏற்றுமதி கட்டுப்பாடு தளர்வினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் திரவம் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியதும், அனைத்து வகையான சானிடைசர் திரவ ஏற்றுமதியையும் மத்திய அரசு தடை செய்தது.

கடந்த மாதம், இதில் ஒரு தளர்வாக ஆல்கஹால் அடிப்டையிலான சானிடைசர் தவிர பிறவற்றுக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டது.

இப்போது கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. ஆல்கஹால் அடிப்படையிலானதும், டிஸ்பென்சர் பம்புடனும் கூடிய சானிடைசர் திரவ கலன்களை தவிர்த்து மற்ற வடிவிலான சானிடைசர் திரவ கலன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக தலைமை இயக்குனர் விடுத்துள்ள அறிக்கையில், “டிஸ்பென்சர் பம்பு பொருத்தப்பட்ட கலன் தவிர்த்து பிற அனைத்து வடிவத்திலான சானிடைசர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இது உடனடி அமலுக்கு வருகிறது” என கூறப்பட்டுள்ளது.


Next Story