தேசிய செய்திகள்

டெல்லி மாநில புதிய பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தா நியமனம் + "||" + Adesh Kumar Gupta replaces Manoj Tiwari as Delhi BJP President

டெல்லி மாநில புதிய பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தா நியமனம்

டெல்லி மாநில புதிய பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தா நியமனம்
டெல்லி மாநில புதிய பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லி  உட்பட 3 மாநிலத்திற்கு பாஜக தலைவர்களை நியமித்து பாஜக  தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டெல்லி மாநில பாஜக தலைவராக இருந்த மனோஜ் திவாரி மாற்றப்பட்டு, ஆதேஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.  சத்தீஸ்கர் மாநில தலைவராக விஷ்ணு தியோ சாய் மற்றும் மணிப்பூர் மாநில தலைவராக திகேந்திர சிங் 
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனோஜ் திவாரி கடந்த 2016 முதல் டெல்லி மாநில தலைவராக பதவி வகித்து வந்தார். டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சி பிடிக்க முடியாததை தொடர்ந்து மனோஜ் திவாரி, தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், அதனை ஏற்க பாஜக மேலிடம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், அவர் மாற்றப்பட்டு ஆதேஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வடக்கு டெல்லி மாநகராட்சி மேயர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.