இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 2 Jun 2020 12:13 PM GMT (Updated: 2 Jun 2020 12:13 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 ஆக அதிகரித்து உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 லிருந்து 95,527 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,394 லிருந்து 5,598 ஆக அதிகரித்துஉள்ளது. கொரோனா பாதித்த 97,581 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,171 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 204 இறப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளது.

இந்தநிலையில்,  மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது.

நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீடு செய்யப்பட வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 73% பேர் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் உலகிலேயே மிக குறைவாக 2.82 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மீட்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளை சரியான நேரத்தில் அடையாளம் காணுதல் மற்றும் முறையான சிகிச்சை காரணமாகவே இதனை எங்களால் அடைய முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story