தேசிய செய்திகள்

கேரளத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Kerala reports highest ever 86 new COVID-19 cases on Tuesday, 1 death

கேரளத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று
கேரளத்தில் புதிதாக 86 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, அங்கு புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதில் 46 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 26 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். இன்று மேலும் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 774 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 627 பேர் குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.