‘பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி’ - ‘மூடிஸ்’ நிறுவன தரவரிசை பற்றி ராகுல் காந்தி கருத்து
பொருளாதாரத்தை பிரதமர் மோடி மோசமாக கையாளுவதாக, ‘மூடிஸ்’ நிறுவன தரவரிசை பற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடுகளின் உற்பத்தி திறன், பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் அவற்றின் கடன் வாங்கும் திறன்பற்றி மதிப்பீடு செய்யும் ‘மூடிஸ்’ நிறுவனம் முதலீடு விஷயத்தில் இந்தியாவுக்கான தரவரிசையை 22 ஆண்டுகளில் முதன் முதலாக குறைத்து இருக்கிறது. 1998-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது 3-வது தரவரிசைக்கு குறைத்துள்ள அந்த நிறுவனம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மதிப்பிட்டு உள்ளது.
இதுபற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பிரதமர் மோடி பொருளாதாரத்தை எவ்வளவு மோசமாக கையாளுகிறார் என்பது ‘மூடிஸ்’ நிறுவனம் வழங்கியுள்ள தரவரிசையின் மூலம் தெரியவருவதாகவும், இந்த நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறி இருக்கிறார்.
ஏழைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு போதிய ஆதரவு இல்லாததால் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story