ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷி இ முகம்மது அமைப்பின் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கன்காங் என்ற பகுதியில் பயங்கரவாதகிள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பயங்கரவாதிகள் மறைவிடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கி சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் என ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் தான் கடந்த சில நாட்களுக்கு முன் புல்வாமாவில் காரில் வெடிகுண்டை நிரப்பி வெடிக்க செய்ய முயன்றதும் அந்த முயற்சியை பாதுகாப்புபடையினர் முறியடித்தாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார் கூறியதாவது:-
இன்று நடத்தப்பட்ட என்கவுன்டரில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் 3 பயங்கரவாதிகளில், ஒருவர் ஐஇடி நிபுணர் என தெரியவந்துள்ளது. அவர் பாகிஸ்தானின் முல்தான் பகுதியை சேர்ந்தவர். 2017 முதல் தெற்கு காஷ்மீரில் உளவு பார்த்து இருந்தார். மற்ற 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story