இந்தியாவில் கொரோனா பாதிப்பால் குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரசின் பிடியில் இருந்து உலகம் எப்போது விடுபடும் என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் நீடிக்கிறது.
சீனாவின் மத்திய நகரமான உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இந்த 6 மாத காலத்தில் உலகில் உள்ள 200 நாடுகளுக்கு பரவி கதிகலங்க வைத்து வருகிறது. உலகமெங்கும் 62¾ லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் பாதித்து இருக்கிறது.
3¾ லட்சத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்திருக்கிறது. அமெரிக்காதான் அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக இன்றளவும் நீடிக்கிறது. அங்கு 18 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உள்ளது. 1 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இந்தநிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 4-கட்டங்களாக தொடர்ந்து 68 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் 5-வது கட்டமாக நோய் கட்டுபாட்டு பகுதியில் இந்த மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொடர்ந்து 98 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அந்த வகையில் இந்தியாவில் மெதுவாக பரவ தொடங்கிய கொரோனா, கடந்த ஒரு மாதமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் உயிரிழப்போர் விகிதம் 2.80 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணிநேரங்களில் மொத்தம் 4,776 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 303 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கொரோனா நோயாளிகளில் குணம் அடைவோர் சதவிகிதம் 48.31சதவீதமாக உள்ளது. தற்போது 1,01,497 பேருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்போர் சதவிகிதம் 2.80 சதவீதம் தான்.
நாட்டில் கொரோனா பரிசோதனைத் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. 480 அரசு ஆய்வுக்கூடங்கள், 208 தனியார் ஆய்வுக்கூடங்கள் உட்பட மொத்தம் 688 ஆய்வுக்கூடங்கள் உள்ளன. இதுவரை 41,03,233 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. நேற்று மட்டும் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 158 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கொரோனா மேலாண்மைக்கான சுகாதாரக் கட்டமைப்பைப் பொறுத்தவரை நாட்டில், தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மட்டும் 952 மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 1,66,332 தனிப்படுக்கைகளும், 21,393 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும், வெண்டிலேட்டர் உதவி கொண்ட 72,762 படுக்கைகளும் உள்ளன.
கொரோனா சிகிச்சைக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட 2,391 சுகாதார மையங்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 945 தனிப்படுக்கைகளும், 11027 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும், வெண்டிலேட்டர் வசதிகொண்ட 46 ஆயிரத்து 575 படுக்கைகளும் உள்ளன.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்,மத்திய அமைப்புகள் ஆகியவற்றுக்கு 125. 28 லட்சம் என்-95 முகக் கவசங்களும், 101.54 லட்சம் தனிநபர் பாதுகாப்புக்கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story