டெல்லியில் புதிதாக 1,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் புதிதாக 1,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 3 Jun 2020 10:31 PM IST (Updated: 3 Jun 2020 10:31 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் புதிதாக 1,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக,கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், தலைநகர் டெல்லியில் இன்று புதிதாக 1,513 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,645 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 9 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த பலியானோரின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 9,542 பேர் குணமடைந்துள்ளனர். 

Next Story