கேரளாவில் யானை கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல்காந்தி மவுனம் காப்பது ஏன்? மேனகாகாந்தி கேள்வி


கேரளாவில் யானை கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல்காந்தி மவுனம் காப்பது ஏன்? மேனகாகாந்தி கேள்வி
x
தினத்தந்தி 4 Jun 2020 3:30 PM IST (Updated: 4 Jun 2020 4:11 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் ராகுல்காந்தி மவுனம் காப்பது ஏன்? என மேனகாகாந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானைக்கு அன்னாச்சி பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும் விலங்குகள் நல உரிமை அமைப்பினைச் சேர்ந்தவருமான மேனகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேனகாகாந்தி அளித்த பேட்டியில், கர்ப்பிணியானை கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று கேரள வனத்துறை மந்திரி, தனது பதவியை ராஜினாமா செய்ய் வேண்டும். வன அலுவலர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சம்பவம் நடந்த மலப்புரம் வயநாடு மக்களவை தொகுதிக்குள் உள்ளது. அந்த தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் இது தொடர்பாக வாய் திறக்காமல் உள்ளார். மவுனம் காத்து வருகிறார். மத்திய அரசை குறை கூறுவதில் கவனம் செலுத்தும் அவர் (ராகுல் ) தனது சொந்த தொகுதியில் நடந்துள்ள பிரச்சினையை எப்படி தீர்ப்பார் என்று தெரியவில்லை என்றார்.

மேலும் கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் தான் வனவிலங்கு வேட்டையாடுதல் அதிகமாக நடக்கிறது இதுவரையாரும் தண்டிக்கப்படவில்லை, 600 யானைகள் கொல்லப்பட்டுள்ளதில் என்ன நடவடிக்கை எடுத்தது கேரள அரசு என்று மேனகா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story