கேரளாவில் புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - முதல்-மந்திரி பினராயி விஜயன்
கேரளாவில் இன்று புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில், இன்று ஒரே நாளில் கேரளாவில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 47 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்கள். மேலும் 37 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தற்போது 854 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமாக 1,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மேலும் 10 ஹாட்ஸ்பாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 124 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன. கொரோனா மையங்கள் மற்றும் வீடுகளில் 1,68,578 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனைகளில் 1,487 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story