தேசிய செய்திகள்

குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி தகவல்கள் + "||" + Coronavirus Cases Cross 2.2 Lakh, Centre Says Delhi's Status Worrying

குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி தகவல்கள்

குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி தகவல்கள்
கடந்த வாரம் முதல் வழக்கத்தை விட அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி

இந்தியாவின் கொரோனா பாதிப்புகள் நேற்று 2.2 லட்சத்தை தாண்டியது, நேற்று ஒருநாள் மட்டும்  9,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள்  மற்றும் பல மாநிலங்கள் மிக உயர்ந்த ஒரு நாள் உயர்வை பதிவு செய்துள்ளன, 

மராட்டியத்தில் அதன் மிக உயர்ந்த ஒரு நாள் பாதிப்பாக 2,933 கொரோனா பாதிப்புகள் பதிவு செய்து, உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் எண்ணிக்கை மொத்தம்  77,793 ஆக உயர்ந்து  உள்ளது.

டெல்லியில் 1,359 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன மொத்தம்  25,000 பாதிப்புகளை தாண்டி உள்ளது.

இந்தியாவில் கடந்த 14 நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் மொத்த பாதிப்புகளில், மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் மட்டுமே 70 சதவீத பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் பாதிப்புகள் உயர்ந்துள்ளன.

இதேபோல் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. இந்த 3 மாநிலங்களில் மட்டும் கடந்த வாரத்தில் 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு வாரமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இதேபோன்ற நிலை கடந்த 2 வாரங்களாக பீகாரிலும், கடந்த வாரத்தில் கர்நாடகா, அரியானா மற்றும அசாம் மாநிலத்திலும் காணப்படுகிறது. ஒடிசா, ஆந்திரா மற்றும் காஷ்மீர் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி மேற்கு வங்கத்தின் கூச் பெஹர், ராஜஸ்தானின் பரத்பூர் மற்றும் ஜலவார், உத்தரகண்ட்டின் டேராடூன் ஆகிய மாவட்டங்கள் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்களாக உருவெடுத்துள்ளன.

மாநிலம் வாரியாக பாதிப்பு:-

* மராட்டியம் - 2,933
* டெல்லி - 1,359
* தமிழகம் - 1,373
* குஜராத் - 492
* ராஜஸ்தான் - 210
* மேற்குவங்காளம் - 368
* உத்சம்தரபிரதெ - 371
* கர்நாடகா - 257
* அரியானா - 327
* மத்தியபிரதேசம் - 174
* ஜம்மு காஷ்மீர் - 285
* ஆந்திரா - 98
* தெலங்கானா - 127
* கேரளா - 94
* அசாம் - 243
* ஜார்க்கண்ட் - 46
* கோவா - 40
* பஞ்சாப் - 39
* சத்தீஸ்கார் - 147 
* உத்தரகாண்ட் - 8
* மணிப்பூர் - 3


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை- சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் கூறி உள்ளார்.
2. ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது - ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை
ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது மற்றும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
3. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
சென்னை முழுவதும் மொத்தமாக 64 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
4. கொரோனா பாதிப்பு : தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது
கொரோனா பாதிப்பு: தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது.
5. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.