தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி


தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 5 Jun 2020 8:41 AM IST (Updated: 5 Jun 2020 8:41 AM IST)
t-max-icont-min-icon

தெலங்கானாவில் உள்ள உஸ்மானிய மருத்துவமனையில் பணிபுரியும் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 

தினமும் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து வருவதாக மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் பணிபுரியும் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தெரிவித்துள்ள தெலங்கான மருத்துவர்கள் சங்க தலைவர் உமா நாகேந்திர விஷ்ணு, தெலங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த உஸ்மானிய மருத்துவமனை மருத்துவர்கள் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்னும் பலரது பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அவர்களை 7 நாட்கள் வரை சுய தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சுதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும் பல சுகாதார ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சப்படுகின்றனர் என தெரிவித்த அவர் இதனால் அரசு ஏற்கனவே அறிவித்தபடி விருப்பமுள்ள சுகாதார ஊழியர்களுக்கு தங்கும் விடுதிகளை வழங்கவேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.



Next Story