இன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம்! எங்கெல்லாம் தெரியும்?
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம், இன்று நள்ளிரவில் நிகழவுள்ளது.
புதுடெல்லி,
சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளியை நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும். இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம், இன்று நள்ளிரவில் நிகழவுள்ளது. இந்திய நேரப்படி, ஜூன் 5ஆம் தேதி இந்திய / இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும். சுமார் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடிக்கும்.
ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும். தெளிவான வானிலை இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் இந்த கிரகணத்தை முழுமையாகக் காணமுடியும்.
இன்று இரவு முதல் நிகழப்போகும் சந்திர கிரகணம், பெனம்ரா (Penumbra) சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.
கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும். புறநிழல் என்பது பூமியின் நிழலின் வெளிப்பகுதியாகும். இதே போன்ற 'புறநிழல் நிலவு மறைப்பு' எனப்படும் சந்திர கிரகணம் தான் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதியும் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story