நடப்பு நிதியாண்டில் எந்த புதிய திட்டத்துக்கும் நிதி இல்லை - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு


நடப்பு நிதியாண்டில் எந்த புதிய திட்டத்துக்கும் நிதி இல்லை - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு
x

நடப்பு நிதியாண்டில் எந்த புதிய திட்டத்துக்கும் நிதி இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் அறிவிப்த்துள்ளது.

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டில் எந்த புதிய திட்டத்திற்கும் கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு ஊக்கச் சலுகை திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் ஒரு வருடத்திற்கு அறிவிக்கப்படாது.

புதிய திட்டங்களை தொடங்க மற்றும் மதிப்பீடு செய்யப்பட்ட திட்டங்கள் வரும் மார்ச் 31 அல்லது மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுகிறது.

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம், ஆத்ம நிர்பார் பாரத் நிவாரணத் திட்டம் மற்றும் பிரதமர் அறிவித்த சிறப்புத் திட்டங்கள் தவிர, பிற திட்டங்கள், துணைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்க கோரி நிதி அமைச்சகத்திற்கு அனுப்புவதை நிறுத்துமாறு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story