கர்நாடகாவில் இன்று மேலும் 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் அதிக அளவாக மேலும் 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
பெங்களூரு,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் அதிக அளவாக மேலும் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,835 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 515 பேரில் 417 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர், மேலும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1,688 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
Related Tags :
Next Story