சமூக இடைவெளியை பின்பற்றாத இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்
சமூக இடைவெளியை பின்பற்றாத இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் பஸ்காரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் சிங். அவர் வேறு போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதையொட்டி, பஸ்காரி போலீசார் அவருக்கு வழியனுப்பு ஊர்வலம் நடத்தினர். அதில், அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி ஜீப்பில் அவர் அமர்ந்திருக்க அவரை பின்தொடர்ந்து ஜீப்புகளிலும், கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் போலீசாரும், பொதுமக்களும் அணிவகுத்து சென்றனர். சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலோக் பிரியதர்ஷி, இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் சிங்கையும், சில போலீசாரையும் இடைநீக்கம் செய்துள்ளார். மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Related Tags :
Next Story