இந்தியா - சீனா இடையிலான உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு
இந்தியா - சீனா இடையிலான உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. லடாக்கில் எல்லை பகுதியில் சீன வீரர்கள் அவ்வப்போது அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயற்சிப்பதும், அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்துவதும் நடந்து வருகிறது.
லடாக் மீது சீனா பல வருடங்களாக கண் வைத்து இருந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி லடாக் மற்றும் சிக்கிமில் சீனா அத்துமீற நினைக்கிறது.
அங்கிருக்கும் கரி குன்ஷா விமான நிலையம் அருகே சீனா விமான தளம் அமைத்துள்ளது. லடாக் அருகே தாக்குதல் நடத்தும் வகையில் சீனா இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி சீனாவின் உளநாட்டு தயாரிப்பில் உருவான விமானங்களை வைத்து சீனா தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா கண்டிப்பாக அமைதியை விரும்பவில்லை. இந்தியாவை சீண்டவே நினைக்கிறது என்கிறார்கள்.அங்குள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் இதேபோல் சீன வீரர்கள் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டும் சுமூக முடிவும் எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இந்திய தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழு, சீன உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் குழுவுடன் எல்லைப்பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
லடாக் எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக இந்தியா - சீனா இடையிலான உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை அமைதியான கலந்துரையாடலின் மூலம் கையாள வேண்டும் என்றும்,மோதல்களாக மாற்ற அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன ராணுவத்தைச்சேர்ந்தவர்கள் பின்வாங்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :
Next Story