மராட்டியம், டெல்லி, குஜராத் கொரோனா பாதிப்பு நிலவரம்


மராட்டியம், டெல்லி, குஜராத் கொரோனா பாதிப்பு நிலவரம்
x
தினத்தந்தி 6 Jun 2020 9:59 PM IST (Updated: 6 Jun 2020 9:59 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியம், டெல்லி, குஜராத் கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகரான டெல்லி, கொரோனா வைரஸ் தொற்று பரவலில் சிக்கி தவிக்கிறது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, டெல்லியில் மேலும் 1320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,664 பேர் குணமடைந்துள்ளனர் என  மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த மாதத்தில் இருந்து இங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

மராட்டியத்தில் இன்று மேலும் 2,739 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை 82,968 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,390 பேர் குணமடைந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மராட்டியத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் அதிக பாதிப்பு உள்ளது. குஜராத்தில் இன்று மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.  குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19,617 ஆக உயர்ந்துள்ளது.


Next Story